திருவாரூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 22 ஆயிரத்து 471 வாக்காளர்கள்


திருவாரூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 22 ஆயிரத்து 471 வாக்காளர்கள்
x
தினத்தந்தி 9 Dec 2021 10:07 PM IST (Updated: 9 Dec 2021 10:07 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 2 லட்சத்து 22 ஆயிரத்து 471 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 2 லட்சத்து 22 ஆயிரத்து 471 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 
இறுதி வாக்காளர் பட்டியல் 
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான 4 நகராட்சிகள் மற்றும் 7 பேரூராட்சிகளின் 216 வார்டுகளில் நடைபெற உள்ள தேர்தல்களுக்கான வாக்காளர் பட்டியல்கள் தொடர்புடைய நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அதன்படி கூத்தாநல்லூர் நகராட்சியில் 23 ஆயிரத்து 388 வாக்காளர்களும், மன்னார்குடி நகராட்சியில் 62 ஆயிரத்து 988 வாக்காளர்களும், திருத்துறைப்பூண்டி நகராட்சியில் 17 ஆயிரத்து 516 வாக்காளர்களும், திருவாரூர் நகராட்சியில் 50 ஆயிரத்து 245 வாக்காளர்களும் உள்ளனர்.
பேரூராட்சிகள் 
குடவாசல் பேரூராட்சியில் 11 ஆயிரத்து 882 வாக்காளர்களும், கொரடாச்சேரி பேரூராட்சியில் 5 ஆயிரத்து 835 வாக்காளர்களும், முத்துப்பேட்டை பேரூராட்சியில் 18 ஆயிரத்து 662 வாக்காளர்களும், நன்னிலம் பேரூராட்சியில் 9 ஆயிரத்து 597 வாக்காளர்களும், நீடாமங்கலம் பேரூராட்சியில் 7 ஆயிரத்து 849 வாக்காளர்களும், பேரளம் பேரூராட்சியில் 5 ஆயிரத்து 48 வாக்காளர்களும், வலங்கைமான் பேரூராட்சியில் 9 ஆயிரத்து 491 வாக்காளர்களும் உள்ளனர்.
282 வாக்குச்சாவடி மையங்கள்
நகர்புற உள்ளாட்சி தேர்தல்களில் மொத்தம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 434 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 27 பெண் வாக்காளர்களும், 10 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 22 ஆயிரத்து 471 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தல்களுக்கு 282 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) கிருஷ்ணமூர்த்தி மற்றும் அனைத்து நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

Next Story