திருப்பத்தூர் மாவட்ட நகரப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு


திருப்பத்தூர் மாவட்ட  நகரப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 9 Dec 2021 10:33 PM IST (Updated: 9 Dec 2021 10:33 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் மாவட்ட நகர்ப்புறஉள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி 3,05,340 வாக்காளர்கள் உள்ளனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட நகர்ப்புறஉள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி 3,05,340 வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்காளர் பட்டியல்

திருப்பத்தூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்களர் பட்டில் வெளியிடும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. வாக்காளர் பட்டியலை கலெக்டர் அமர்குஷ்வாஹா, அங்கீகரிக்கப்பட்ட அரசியில் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
வாக்காளர்கள் விவரம் வருமாறு:-

நகராட்சிகள்

திருப்பத்தூர் நகராட்சியில் 32,025 ஆண் வாக்காளர்கள், 33,707 பெண் வாக்காளர்கள், இதர வாக்காளர்கள் 7 பேர் என 65,739 பேர் உள்ளனர். 
ஜோலார்பேட்டை நகராட்சியில் 11,476 ஆண் வாக்காளர்கள்,  12,691 பெண் வாக்காளர்கள், ஒரு இதர வாக்காளர் என 24,168 வாக்காளர்களும், வாணியம்பாடி நகராட்சியில் 38,032 ஆண் வாக்காளர்கள், 41,075 பெண் வாக்காளர்கள், 20 இதர வாக்காளர்கள் என 79,127 வாக்காளர்களும், ஆம்பூர் நகராட்சியில் 48,981 ஆண் வாக்காளர்கள், 52,604 பெண் வாக்காளர்கள், 18 இதர வாக்காளர்கள் என 1,01,603 வாக்காளர்கள் உள்ளனர்.

பேரூராட்சிகள் 

இதேபோல் ஆலங்காயம் பேரூராட்சியில் 7362 ஆண்கள், 7709 பெண்கள் என 15071 வாக்காளர்களும், நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் 3,848 ஆண்கள், 4,267 பெண்கள் என 8,115 வாக்காளர்களும், உதயேந்திரம் பேரூராட்சியில் 5,525 ஆண்கள், 5,981 பெண்கள், இதர வாக்காளர்கள் 11 பேர் என 11,517 வாக்காளர்கள் உள்ளனர்.
மாவட்டத்தில் மொத்தமுள்ள 4 நகராட்சி, 3 பேரூராட்சிகளில் 1,47,249 ஆண்கள், 1,58,034 பெண்கள், இதர வாக்காளர்கள் 57 பேர் என 3,05,340 பேர் வாக்களிக்க உள்ளனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கு.செல்வராசு, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வில்சன்ராஜசேகர், ஹரிஹரன், செல்வன், நகராட்சி ஆணையாளர்கள் ஜெயராமராஜா, பழனி, ஸ்டான்லிபாபு, ஷகிலா, பேரூராட்சி செயல் அலுவலர்கள் கணேசன், நந்தகுமார், குருசாமி மற்றும் அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Next Story