நகர்ப்புற உள்ளாட்சி வார்டு வாரியான வாக்காளர் பட்டியல்


நகர்ப்புற உள்ளாட்சி வார்டு வாரியான வாக்காளர் பட்டியல்
x
தினத்தந்தி 9 Dec 2021 10:47 PM IST (Updated: 9 Dec 2021 10:47 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி வார்டு வாரியான வாக்காளர் பட்டியலை கலெக்டர் லலிதா வெளியிட்டார்.

மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி வார்டு வாரியான  வாக்காளர் பட்டியலை கலெக்டர் லலிதா வெளியிட்டார்.
வாக்காளர் பட்டியல்
நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. 
வாக்காளர் பட்டியலை கலெக்டர் லலிதா வெளியிட அதனை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் தனபால் பெற்றுக் கொண்டார். 
தொடர்ந்து நகராட்சி மற்றும் பேரூராட்சி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்காளர் பட்டியலை பெற்றுக் கொண்டனர். 
அப்போது கலெக்டர் கூறியதாவது:-
123 வார்டுகள்
மயிலாடுதுறை நகராட்சியில் உள்ள 36-வார்டுகள், சீர்காழி நகராட்சியில் உள்ள 24-வார்டுகள், தரங்கம்பாடி பேரூராட்சியில் உள்ள 18-வார்டுகள், குத்தாலம் பேரூராட்சியில் உள்ள 15-வார்டுகள், மணல்மேடு பேரூராட்சியில் உள்ள 15-வார்டுகள், வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் உள்ள 15-வார்டுகள் ஆக மொத்தம் 123-வார்டுகளுக்கு, சட்டமன்ற வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் வார்டு வாரியான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி முடிவுற்று, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட கால அட்டவணையின்படி, நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தலுக்கான வார்டு வாரியான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், மயிலாடுதுறை மற்றும் சீர்காழி நகராட்சிகள், குத்தாலம், மணல்மேடு, தரங்கம்பாடி, வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சிகள் ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் வாக்காளர் பதிவு அலுவலர்களால் நேற்று விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்களின் 2 நகல்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story