பெண்ணிடம் 5½ பவுன் சங்கிலி பறிப்பு


பெண்ணிடம் 5½ பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 9 Dec 2021 11:13 PM IST (Updated: 9 Dec 2021 11:13 PM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டம் அருகே பெண்ணிடம் 5½ பவுன் தாலிச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

குழித்துறை, 
மார்த்தாண்டம் அருகே பெண்ணிடம் 5½ பவுன் தாலிச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
முறுக்கு வியாபாரி
மார்த்தாண்டம் அருகே உள்ள பாகோடு வட்டவிளையை சேர்ந்தவர் பொன்னையன். இவருடைய மனைவி உஷா (வயது50). இவர் தனது வீட்டில் வைத்து முறுக்கு சுட்டு, வியாபாரம் செய்து வருகிறார். இதற்காக தினமும் அதிகாலையில் வீட்டின் முன்னால் அமர்ந்து முறுக்கு சுற்றி தயார் செய்வது வழக்கம்.
நேற்று முன்தினம் அதிகாலை 4½ மணியளவில் உஷா தனது வீட்டு முன்பு அமர்ந்து முறுக்கு சுட்டு கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் கீழே இறங்கி உஷாவின் அருகில் சென்று அவரது கழுத்தில் கிடந்த 5½ பவுன் தாலிச் சங்கிலியை பறித்தான். இதனால், அதிர்ச்சி அடைந்த உஷா ‘திருடன்... திருடன்...’ என்று சத்தம் போட்டார். 
உடனே, அந்த ஆசாமி ஓடி சென்று சற்று தூரத்தில் மோட்டார் சைக்கிளுடன் தயாராக நின்று கொண்டிருந்த தனது கூட்டாளியுடன் தப்பி சென்று விட்டான். 
போலீசார் வலைவீச்சு
இதுகுறித்து உஷா மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் விசாரணை மேற்கொண்டு மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார். மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு கொள்ளையர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அதிகாலையில் வீட்டு முன்பு முறுக்கு சுட்டுக் கொண்டிருந்த பெண்ணிடம் 5½ பவுன் சங்கிலி பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story