நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல்
சிவகங்கை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார்.
வாக்காளர் பட்டியல் வெளியீடு
நிகழ்ச்சியில் புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் வெளியிட அதை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பெற்றுக் கொண்டனர்.பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் தற்போது 3 நகராட்சிகள், 12 பேரூராட்சிகள் உள்ளன. இதில் மானாமதுரை பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தற்ேபாது மானாமதுரை நகராட்சியை தவிர மீதமுள்ள 3 நகராட்சி மற்றும் 11 பேருராட்சிகளுக்கு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் மாநில தேர்தல் ஆணையர் அறிவுரைப்படிநகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்பாளர்கள் விண்ணப்ப மனு பெறும்வரை பெறப்படும் புதிய வாக்காளர் சேர்ப்பு தொடர்பான மனுக்கள் பெறப்பட்டு இணைப்பு பட்டியல் வெளியிடப்படும். தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலின்படி 3 நகராட்சிகளில் சேர்த்து 90 வார்டுகள் உள்ளன. இவைகளில் 196 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுபோல 11 பேரூராட்சிகளின் சேர்த்து 168 வார்டுகள் உள்ளன. இவைகளில் 205 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மொத்தமாக தற்போது 258 வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் 1 லட்சத்து 49 ஆயிரத்து 481 ஆண்களும், 1 லட்சத்து 57 ஆயிரத்து 257 பெண்களும், 12 பேர் 3-ம் பாலினத்தவர்கள் என மொத்தம் 3 லட்சத்து 6 ஆயிரத்து 750 வாக்காளர்கள் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
நகராட்சி விவரம்
சிவகங்கை நகராட்சியில் 17,879 ஆண் வாக்காளர்களும், 18 ஆயிரத்து 613 பெண் வாக்காளர்களும் மொத்தம் 36 ஆயிரத்து 492 வாக்காளர்கள் உள்ளனர். காரைக்குடியில் 44 ஆயிரத்து 848 ஆண் வாக்காளர்களும், 46 ஆயிரத்து 835 பெண் வாக்காளர்களும், 3-ம் பாலினத்தவர் 8 பேர் என மொத்தம் 91 ஆயிரத்து 691 வாக்காளர்கள் உள்ளனர். தேவகோட்டை நகராட்சியில், 20 ஆயிரத்து 86 வாக்காளர்களும், 21 ஆயிரத்து 405 பெண் வாக்காளர்களும், 3-ம் பாலினத்தவர்கள் 2 என மொத்தம் 41 ஆயிரத்து 493 வாக்காளர்கள் உள்ளனர்.
மானாமதுரையை தவிர மீதமுள்ள 11 பேரூராட்சிகளில், 66 ஆயிரத்து 668 ஆண் வாக்காளர்களும், 70 ஆயிரத்து 404 பெண் வாக்காளர்களும், 3-ம் பாலினத்தவர்கள் 12 என மொத்தம் 1 லட்சத்து 37 ஆயிரத்து 84 வாக்காளர்கள் உள்ளனர்.
Related Tags :
Next Story