திருவண்ணாமலையில் பலத்த மழை
தினத்தந்தி 9 Dec 2021 11:25 PM IST (Updated: 9 Dec 2021 11:25 PM IST)
Text Sizeதிருவண்ணாமலையில் பலத்த மழை பெய்தது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையால் நீ்ர்நிலைகளுக்கு தண்ணீர்வரத்து அதிகரித்து பெரும்பான்மையான ஏரிகள் நிரம்பின.
இதையடுத்து அவ்வப்போது மழை பெய்தது. இந்த நிலையில் திருவண்ணாமலையில் நேற்று பகலில் வெயில் அதிகமாக இருந்தது.
பின்னர் 12 மணி அளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சுமார் 1 மணி அளவில் திடீரென பலத்த மழை பெய்தது. சுமார் 30 நிமிடங்கள் மழை வெளுத்துவாங்கியது.
இதனால் சாலைகளில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire