வேலூர் மாவட்டத்தில் 5,85,855 வாக்காளர்கள் உள்ளனர். மாநகராட்சியில் 4,09,967 வாக்காளர்கள்


வேலூர் மாவட்டத்தில் 5,85,855 வாக்காளர்கள் உள்ளனர். மாநகராட்சியில் 4,09,967 வாக்காளர்கள்
x
தினத்தந்தி 9 Dec 2021 11:29 PM IST (Updated: 9 Dec 2021 11:29 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், 5 லட்சத்து 85 ஆயிரத்து 855 வாக்காளர்கள் உள்ளதாக கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.

வேலூர்

வேலூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், 5 லட்சத்து 85 ஆயிரத்து 855 வாக்காளர்கள் உள்ளதாக கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.

வாக்காளர் பட்டியல் வெளியீடு

வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர் மாநகராட்சி, குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சிகள், பள்ளிகொண்டா, ஒடுகத்தூர், பென்னாத்தூர், திருவலம் பேரூராட்சிகளுக்கு விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு வாரியாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி அங்கீகரிக்கப்பட்ட அரசியல்கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். 

பின்னர் கலெக்டர் பேசியதாவது:-

437 வாக்குச்சாவடிகள்

வேலூர் மாநகராட்சி பகுதியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இங்கு 4 லட்சத்து 9 ஆயிரத்து 967 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிக்க 437 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் தலா 146 வாக்குச்சாவடிகள் ஆண் மற்றும் பெண் வாக்காளர்கள் தனித்தனியாக வாக்களிக்கவும், 145 வாக்குச்சாவடிகள் இருபாலரும் வாக்களிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பேரணாம்பட்டு, குடியாத்தம் ஆகிய நகராட்சிகளில் மொத்தம் 57 வார்டுகள் உள்ளன. 2 நகராட்சிகளில் மொத்தம் 1,31,404 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிக்க 141 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் தலா 57 வாக்குச்சாவடிகள் ஆண் மற்றும் பெண் வாக்காளர்கள் தனித்தனியாகவும், 27 வாக்குச்சாவடிகளில் இருபாலரும் வாக்களிக்க உள்ளனர்.

5,85,855 வாக்காளர்கள்

பள்ளிகொண்டா, ஒடுகத்தூர், பென்னாத்தூர், திருவலம் ஆகிய 4 பேரூராட்சிகளில் மொத்தம் 63 வார்டுகள் உள்ளன. இங்கு மொத்தம் 44,484 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிக்க 68 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் தலா 5 வாக்குச்சாவடிகள் ஆண் மற்றும் பெண் வாக்காளர்கள் தனித்தனியாகவும், 58 வாக்குச்சாவடிகள் இருபாலரும் வாக்களிக்கும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 2,82,160 ஆண்வாக்காளர்கள், 3,03,629 பெண் வாக்காளர்கள், 66 மூன்றாம் பாலினத்தவர்கள் என்று மொத்தம் 5 லட்சத்து 85 ஆயிரத்து 855 வாக்காளர்கள் உள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்யப்படும் இறுதிநாள் வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பான விவரங்கள் மேற்கொள்ளப்படும். வாக்குப்பதிவு பணியில் 3,100 அலுவலர்கள் ஈடுபட உள்ளனர். 

இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் வேலூர் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார், தேர்தல்பிரிவு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story