நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு
விருதுநகர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள அருப்புக்கோட்டை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர் மற்றும் விருதுநகர் நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் 551 வாக்குச்சாவடிகளுக்கு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர்களின் எண்ணிக்கை விவரம் வருமாறு,
அருப்புக்கோட்டை நகராட்சியில் ஆண் வாக்காளர்கள் 36,209, பெண் வாக்காளர்கள் 38,463. இதரர்-7, மொத்தம் 74,679 வாக்காளர்கள். ராஜபாளையம் நகராட்சியில் ஆண் வாக்காளர்கள் 55,912, பெண் வாக்காளர்கள் 58,905, இதரர் 11, மொத்தம் 1,14,828 வாக்காளர்கள். சாத்தூர் நகராட்சியில் ஆண் வாக்காளர்கள் 12,228, பெண் வாக்காளர்கள் 13,101, இதரர் 4, மொத்தம் 25,333 வாக்காளர்கள். ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் ஆண் வாக்காளர்கள் 33,250, பெண் வாக்காளர்கள் 35,301, இதரர் 10, மொத்தம் 68,561 வாக்காளர்கள். விருதுநகர் நகராட்சியில் ஆண் வாக்காளர்கள் 30,275, பெண் வாக்காளர்கள் 32,196, இதரர் 23, மொத்தம் 62,494 வாக்காளர்கள்.
செட்டியார்பட்டி பேரூராட்சியில் ஆண் வாக்காளர்கள் 7,393, பெண் வாக்காளர்கள் 7,751, இதரர் 4, மொத்தம் 15,148 வாக்காளர்கள். காரியாபட்டி பேரூராட்சியில் ஆண் வாக்காளர்கள் 7,098, பெண் வாக்காளர்கள் 7,573, இதரர் 2, மொத்தம் 14,673 வாக்காளர்கள். மல்லாங்கிணறு பேரூராட்சியில் ஆண் வாக்காளர்கள் 5,105, பெண் வாக்காளர்கள் 5,202, இதரர் 1, மொத்தம் 10,308 வாக்காளர்கள். மம்சாபுரம் பேரூராட்சியில் ஆண் வாக்காளர்கள் 7,984, பெண் வாக்காளர்கள் 8,574, மொத்தம் 16558 வாக்காளர்கள். எஸ்.கொடிக்குளம் பேரூராட்சியில் ஆண் வாக்காளர்கள் 5,585, பெண் வாக்காளர்கள் 5,658, இதரர் 2, மொத்தம் 11245 வாக்காளர்கள். சேத்தூர் பேரூராட்சியில் ஆண் வாக்காளர்கள் 8,407, பெண் வாக்காளர்கள் 8,965, இதரர் 1, மொத்தம் 17,373 வாக்காளர்கள். சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் ஆண் வாக்காளர்கள் 3,649, பெண் வாக்காளர்கள் 3,832, இதரர் 2, மொத்தம் 7483 வாக்காளர்கள். வ.புதுப்பட்டி பேரூராட்சியில் ஆண் வாக்காளர்கள் 3,353, பெண் வாக்காளர்கள் 3,458, மொத்தம் 6,811 வாக்காளர்கள். வத்திராயிருப்பு பேரூராட்சியில் ஆண் வாக்காளர்கள் 6,927, பெண் வாக்காளர்கள் 7,220, இதரர் 1, மொத்தம் 14,148 வாக்காளர்கள்.
பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்
இந்த பட்டியலை பார்வையிட்டு அதில் பெயர்கள் விடுபட்டிருந்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடமும், புதிதாக பெயர் சேர்க்க வேண்டி இருப்பின் வருவாய்த்துறை வாக்காளர் பதிவு அலுவலரிடமும் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story