கார் மோதி மூதாட்டி உள்பட 2 பேர் படுகாயம்
திருமணத்திற்கு சென்றுவிட்டு திரும்பியபோது கார் மோதி மூதாட்டி உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
நொய்யல்,
திருமண நிகழ்ச்சி
மண்மங்கலம் அருகே காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 29). இவர் கரூர் வெங்கமேடு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கண்ணம்மாள் (62) என்பவருடன் நொய்யல் பகுதியில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அவர்கள் 2 பேரும் ஈரோடு-கரூர் நெடுஞ்சாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
புன்னம் சத்திரம் அருகே சென்று கொண்டிருந்த போது கரூர் அருகம்பாளையம் ரோடு லட்சுமி நகரை சேர்ந்த பாலசுப்ரமணியன் என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
2 பேர் படுகாயம்
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த மூதாட்டி கண்ணம்மாள் மற்றும் வடிவேல் ஆகியோரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கரூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். பின்னர் கண்ணம்மாள் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த விபத்து குறித்து வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி அதிவேகமாக காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய பாலசுப்ரமணியன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story