2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 10 Dec 2021 1:43 AM IST (Updated: 10 Dec 2021 1:43 AM IST)
t-max-icont-min-icon

2 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது

திருச்சி
திருச்சி அரியமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணாநகர் மேலஅம்பிகாபுரத்தில் சிலம்பரசன் (வயது 25) என்பவர் சொத்து பிரச்சினை காரணமாக படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக இளவரசன் மற்றும் சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேர் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இதில் இளவரசன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளவரசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் நேற்று வழங்கப்பட்டது. இதேபோல் பாலக்கரை மேட்டுத்தெருவில் உள்ள ரேசன்கடை அருகே கடந்த அக்டோபர் மாதம் 21-ந் தேதி கிருபாகரன் என்பவர் அதே பகுதியை சேர்ந்த ஒருவரை ஆபாசமாக திட்டி கத்தியால் தாக்கியதாக பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருபாகரனை கைது செய்தனர். கிருபாகரன் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.


Next Story