ரூ.1 கோடி நிலம் அபகரிப்பு வழக்கில் கணவன்-மனைவி மீது வழக்கு


ரூ.1 கோடி நிலம் அபகரிப்பு வழக்கில் கணவன்-மனைவி மீது வழக்கு
x
தினத்தந்தி 10 Dec 2021 1:48 AM IST (Updated: 10 Dec 2021 1:48 AM IST)
t-max-icont-min-icon

ரூ.1 கோடி நிலம் அபகரிப்பு வழக்கில் கணவன்-மனைவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது

திருச்சி
திருச்சி சோமரசம்பேட்டையை சேர்ந்த அண்ணாதுரை மகன் சசிகுமார். இவர், திருச்சி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு மற்றும் மீட்பு சிறப்பு பிரிவு போலீசில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், அதவத்தூர் கிழக்கில் (சாந்தாபுரம்) உள்ள எங்களது தந்தைக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான 1 ஏக்கர் நிலத்தை, உறையூரை சேர்ந்த ஞானசேகரன், அவரது மனைவி நளினி ஆகியோர் போலி பத்திரம் தயாரித்து அபகரித்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் எங்களது நிலத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த புகார் தொடர்பாக இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து ஞானசேகரன் மற்றும் அவரது மனைவி நளினி ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story