130 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
திண்டுக்கல்லுக்கு பார்சலில் வந்த 130 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்:
வெளிமாநிலங்களில் இருந்து திண்டுக்கல்லுக்கு பார்சலில் புகையிலை பொருட்கள் அனுப்பி வைக்கப்படுவதாக, தனிப்படை போலீசார் தகவல் கிடைத்தது. அதன்பேரில் திண்டுக்கல்லில் உள்ள சில பார்சல் சேவை நிறுவனங்களை போலீசார் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று ஒரு பார்சல் சேவை நிறுவனத்தில் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது சந்தேகத்தின் பேரில் பார்சல்களை போலீசார் பிரித்து பார்த்தனர். அதில் ஒரு பார்சலில் புகையிலை பொருட்கள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து பார்சலில் வந்த 130 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் பார்சலை அனுப்பிய நபர் யார்?, யாருக்கு அனுப்பப்பட்டது? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story