கப்பன் பூங்காவுக்கு வரும் நாய்களுக்கு கடிவாளம் போட வேண்டும் - மாநகராட்சிக்கு, கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு


கப்பன் பூங்காவுக்கு வரும் நாய்களுக்கு கடிவாளம் போட வேண்டும் - மாநகராட்சிக்கு, கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 10 Dec 2021 2:54 AM IST (Updated: 10 Dec 2021 2:54 AM IST)
t-max-icont-min-icon

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதால் கப்பன் பூங்காவுக்கு வரும் நாய்களுக்கு கடிவாளம் போட வேண்டும் என்று மாநகராட்சிக்கு கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

அசுத்தம் செய்யும் நாய்கள்

  பெங்களூரு கப்பன் பூங்காவுக்கு வரும் நபர்கள் தாங்கள் வளர்க்கும் நாய்களுடன் வருகிறார்கள். இதுதவிர தெருநாய்களும் கப்பன் பூங்காவில் சுற்றி திரிகிறது.

  இவ்வாறு நாய்கள் சுற்றி திரிவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், சிறுவர், சிறுமிகளை அந்த நாய்கள் அச்சுறுத்தி வருவதாகவும், குறிப்பாக வளர்ப்பு நாய்களை அழைத்து வரும் நபர்கள், பூங்காவுக்குள் அசுத்தம் செய்ய வைத்துவிட்டு அழைத்து செல்வதாகவும், இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி கோரி கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

  அந்த பொதுநல மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

கடிவாளம் போட வேண்டும்

  அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், தெரு நாய்கள், வளர்ப்பு நாய்களால் பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுவதுடன், கப்பன் பூங்காவை நாய்கள் அசுத்தம் செய்துவருவதால், இதற்கு கடிவாளம் போட மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறினார்.

  இதனை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, பெங்களூரு கப்பன் பூங்காவுக்கு வரும் பொதுமக்களுக்கு தெருநாய்கள், வளர்ப்பு நாய்களால் இடையூறு ஏற்படுவதல், பூங்காவுக்குள் நாய்கள் நுழைவுதை தடுக்கவும், இதற்கு கடிவாளம் போடவும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் மாநகராட்சிக்கு தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story