அரசு பஸ் டிரைவர் திடீர் சாவு
அரசு பஸ் டிரைவர் திடீர் உயிரிழந்தார்.
மதுரை,
மதுரை மாவட்டம் செக்கானூரணி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 44). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவாக பணியாற்றி வந்தார். நேற்று காலை 6 மணிக்கு கொடைக்கானலுக்கு செல்லும் அரசு பஸ்சில் டிரைவாக சென்றார். அப்போது பஸ்சில் 30 பயணிகள் இருந்தனர். பஸ் ஆரப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு குரு தியேட்டர் அருகே உள்ள சிக்னல் பகுதியில் சென்றபோது நிலை தடுமாறியது. உடனே டிரைவர் சட்டென்று பஸ்சை நிறுத்தி பயணிகளை காப்பாற்றியதுடன்,, மயங்கி விழுந்துள்ளார். உடனே 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. அதில் இருந்த மருத்துவ குழுவினர் ஆறுமுகத்தை பரிசோதித்தபோது அவர் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:- டிரைவர் பஸ்சை எடுத்தால் 20 மணி நேரம் தொடர்ந்து நெடுந்தூர பயணம் செய்யும் நிலை உள்ளது. இதனால் அவர்களுக்கு மன அழுத்தமும் உடல் பாதிப்பும் ஏற்படுகிறது. 40 வயதை கடந்தவர்களுக்கு கட்டாயமாக இலவச முழு உடல் பரிசோதனை மற்றும் கண் பரிசோதனை 6 மாதத்துக்கு ஒரு முறை போக்குவரத்து கழகம் சார்பாக செய்ய வேண்டும். டிரைவர் ஆறுமுகத்தின் குடும்பத்திற்கு உரிய நிவாரணமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கவேண்டும் என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story