பெத்தநாயக்கன்பாளையத்தில் திடீரென்று தீப்பிடித்து எரிந்த கார்
பெத்தநாயக்கன்பாளையத்தில் திடீரென்று தீப்பிடித்து கார் எரிந்தது.
பெத்தநாயக்கன்பாளையம்:
பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள கருமந்துறையை சேர்ந்தவர்கள் தீர்த்தன் (வயது 45), ஆண்டி (58). இவர்கள் நேற்று இரவு ஒரு காரில் கருமந்துறையில் இருந்து ஆத்தூருக்கு சென்று கொண்டிருந்தனர். அந்த கார் பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் வந்த போது திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. காரில் இருந்தவர்கள் உடனே வெளியே வந்ததால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். மேலும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. கார் முற்றிலுமாக எரிந்து எலும்புக்கூடானது. இதுதொடர்பாக ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story