ஊட்டியில் சி.ஜ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம்


ஊட்டியில் சி.ஜ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Dec 2021 8:00 PM IST (Updated: 10 Dec 2021 8:00 PM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் சி.ஜ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம்

ஊட்டி

அகில இந்திய அளவில் தொழிற்சங்கங்கள் சார்பில் கியாஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று 12 மணியிலில் இருந்து 10 நிமிடம் சாலையில் வாகனங்களை நிறுத்தி போராட்டம் நடந்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

 இதன்படி நீலகிரி மாவட்டம் ஊட்டி சேரிங் கிராஸ் காந்தி சிலை அருகில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் வாகனங்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட பொருளாளர் நவீன் சந்திரன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 

Next Story