செல்போனில் வீடியோ எடுத்து நண்பர்களுக்கு அனுப்பிவிட்டு விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
செல்போனில் வீடியோ எடுத்து நண்பர்களுக்கு அனுப்பிவிட்டு விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
கூடலூர்
கூடலூர் அருகே செல்போனில் வீடியோ எடுத்து நண்பர்களுக்கு அனுப்பிவிட்டு விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
விஷம் குடிக்கும் வீடியோ
கூடலூர் தாலுகா தேவர்சோலை அருகே உள்ள தர்ப்பக்கொல்லி ஆதிவாசி காலனியை சேர்ந்தவர் பசுவராஜ். இவருடைய மகன் அபிலாஷ் (வயது 24). கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி இரவு தனது நண்பர்களின் செல்போன்களுக்கு வீடியோ காட்சி அனுப்பி வைத்தார். அதில் விஷம் குடித்து தான் இறக்கப் போவதாக அதில் பதிவிட்டிருந்தார்.
அதை கண்ட நண்பர்கள் உடனடியாக அவரது வீட்டுக்கு ஓடி வந்தனர். பின்னர் கதவை திறந்து பார்த்த போது விஷம் குடித்து அபிலாஷ் மயங்கி கிடந்தார். இதைத்தொடர்ந்து அவரை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆதிவாசி வாலிபர் சாவு
அங்கு அபிலாசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து தேவர்சோலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
உயிரிழந்த ஆதிவாசி வாலிபர் அபிலாஷ், பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்தார். ஆனால் இந்த காதல் நிறைவேறாததால் வாழ்க்கையில் வெறுப்படைந்து விஷம் அருந்தி அதை வீடியோவாக பதிவு செய்து நண்பர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
பின்னர் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தது விசாரணையில் தெரியவந்தது. இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story