கூடலூரில் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி அரசு பஸ்


கூடலூரில் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி அரசு பஸ்
x
தினத்தந்தி 10 Dec 2021 8:01 PM IST (Updated: 10 Dec 2021 8:01 PM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி அரசு பஸ்

கூடலூர்

கூடலூரில் கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ் தடுப்பு சுவரில் மோதியது. இதைத்தொடர்ந்து ஆட்டோ சேதமடைந்தது. மேலும் அதில் பயணம் செய்த 3 பெண்கள் காயம் அடைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ்

கூடலூருக்கு நேற்று மாலை 5 மணிக்கு கொளப்பள்ளியில் இருந்து கூடலூர் சுமார் 20 பயணிகளுடன் அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த சமயத்தில் பள்ளிக்கூடங்கள் முடிந்து மாணவ-மாணவிகள் ஏராளமானவர்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் செல்லும் மெயின் ரோட்டில் அரசு பஸ் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. தொடர்ந்து சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவர்களில் வேகமாக மோதியது. தொடர்ந்து தடுப்பு சுவர்கள் சாலையின் மறுபுறம் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது மோதியது.

3 பெண்கள் காயம்

இதில் ஆட்டோ பலத்த சேதமடைந்தது. மேலும் ஆட்டோவில் பயணம் செய்த பாத்திமா (வயது 60), சம்ஷத் (47), மாலு (42) என 3 பெண்கள் காயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக  போலீசார் இன்ஸ்பெக்டர் பூ ராஜன் மற்றும் போக்குவரத்து கழக கிளை மேலாளர் ராஜ்குமார் உள்ளிட்டவர்கள் நேரில் வந்து விசாரணை நடத்தினர். 

பின்னர் அரசு பஸ் மீட்கப்பட்டு போக்குவரத்து பணிமனை கொண்டு செல்லப்பட்டது. விபத்து காரணமாக அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story