விளாத்திகுளம் அருகே பெண் தூக்கு போட்டு தற்கொலை
விளாத்திகுளம் அருகே பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள கீழவைப்பார் கிராமத்தைச் சேர்ந்த பழனி ராஜ் மனைவி கனகராணி (வயது 56). பழனிராஜ் 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த தம்பதியருக்கு 2 ஆண், 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு மகனுக்கு திருமணம் ஆகிவிட்டது. இதில் மணிராஜ் என்ற மாற்றுத்திறனாளி மகனுக்கு திருமணம் ஆகாமல் இருந்தால் கனகராணி மனமுடைந்த காணப்பட்டாராம். சம்பவத்தன்று கனகராணி தனது வீட்டில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story