ஆர்.கே. பேட்டை அருகே கூடுதல் பஸ் இயக்கக்கோரி மறியல்
கூடுதல் பஸ் இயக்க கோரி கல்லூரி மாணவர்கள் அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கூட்ட நெரிசல்
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே. பேட்டை அருகே மகன்காளிகாபரம் கிராமத்தில் இருந்து காலை நேரத்தில் அரசு நகர பஸ் ஒன்று திருத்தணிக்கு செல்கிறது. மகன்காளிகாபுரம், பாலாபுரம், தியாகாபுரம், அம்மையார்குப்பம், ஆர்.கே. பேட்டை உள்பட பல கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் இந்த பஸ்சில் ஏறி கல்லூரிக்கு சென்று வருகின்றனர். இந்த வழிதடத்தில் காலை நேரங்களில் குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் கூட்ட நேரிசல் ஏற்படுவதால் கல்லூரி மாணவர்கள் அமருவதற்கு இடமில்லாமல் சில நேரங்களில் நின்று கொண்டும், படிகளில் தொங்கிக் கொண்டும் திருத்தணி வரை செல்ல வேண்டிய நிலைமை ஏற்படுகிறது.
சிறைபிடிப்பு
இந்த நிலையில் நேற்று பஸ் அம்மையார்குப்பம் கிராமத்திற்கு வந்தபோது கல்லூரி மாணவர்கள் அந்த பஸ்சை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் கிடைத்ததும் ஆர்.கே. பேட்டை போலீசார் அங்கு சென்று மாணவர்களை அமைதிப்படுத்தி் சாலை மறியலை கைவிட செய்து அதே பஸ்சில் மாணவர்களை ஏற்றி திருத்தணிக்கு அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story