திருவள்ளூர் மாவட்டத்தில் நகர்ப்புற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு


திருவள்ளூர் மாவட்டத்தில் நகர்ப்புற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 10 Dec 2021 9:08 PM IST (Updated: 10 Dec 2021 9:08 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

ஆவடி, திருவள்ளூர், திருத்தணி

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேற்று வெளியிட்டுள்ள வாக்காளர் பட்டியலின் விவரங்கள் வருமாறு.

அவடி மாநகராட்சியில் 350 வாக்குச்சாவடிகளில் 1 லட்சத்து 52 ஆயிரத்து 668 ஆண்களும், 1 லட்சத்து 55 ஆயிரத்து 5 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் 71 என மொத்தம் 3 லட்சத்து 7 ஆயிரத்து 744 பேர்.

திருவள்ளூர் நகராட்சியில் 51 வாக்குச்சாவடிகளில் 24 ஆயிரத்து 662 ஆண்களும், 26 ஆயிரத்து 22 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் 5 என மொத்தம் 50 ஆயிரத்து 689 பேர்.

திருத்தணி நகராட்சியில் 42 வாக்குச்சாவடிகளில் 17 ஆயிரத்து 729 ஆண்களும், 18 ஆயிரத்து 989 பெண்களும், மூன்றாம் பாலினத்தை 8 என மொத்தம் 36 ஆயிரத்து 726 பேர்.

திருவேற்காடு, பூவிருந்தமல்லி, ஊத்துக்கோட்டை

திருவேற்காடு நகராட்சியில் 77 வாக்குச்சாவடி மையத்தில், 39 ஆயிரத்து 912 ஆண்களும், 39 ஆயிரத்து 927 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் 24 என மொத்தம் 79 ஆயிரத்து 863 பேர்.

பூந்தமல்லி நகராட்சியில் 63 வாக்குச்சாவடி மையத்தில், 29 ஆயிரத்து 397 ஆண்களும், 30 ஆயிரத்து 173 பெண்களும், மூன்றாம் பாலினர் 9 என மொத்தம் 59 ஆயிரத்து 579 பேர்.

ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 மையத்தில் 4 ஆயிரத்து 928 ஆண்களும், 5 ஆயிரத்து 381 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் 1 என மொத்தம் 10 ஆயிரத்து 310 பேர்.

ஆரணி, கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர்

ஆரணி பேரூராட்சியில் 15 வாக்குச்சாவடி மையத்தில், 5 ஆயிரத்து 348 ஆண்களும், 5 ஆயிரத்து 665 பெண்களும் என மொத்தம் 11 ஆயிரத்து 13 பேர்.

கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் 22 வாக்குச்சாவடி மையங்களில், 8 ஆயிரத்து 772 ஆண்களும், 8 ஆயிரத்து 471 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் 3 என மொத்தம் 17 ஆயிரத்து 246 பேர்.

மீஞ்சூர் பேரூராட்சியில் 28 வாக்குச்சாவடி மையங்களில், 12 ஆயிரத்து 819 ஆண்களும், 13 ஆயிரத்து 369 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் 2 என மொத்தம் 26 ஆயிரத்து 190 பேர்.

நாரவாரிக்குப்பம், திருமழிசை, பள்ளிப்பட்டு

நாரவாரிக்குப்பம் பேரூராட்சியில் 25 வாக்குச்சாவடி மையத்தில், 10 ஆயிரத்து 777 ஆண்களும், 11 ஆயிரத்து 425 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் 2 என மொத்தம் 22 ஆயிரத்து 204 பேர்.

திருமழிசை பேரூராட்சியில் 19 வாக்குச்சாவடி மையத்தில், 8 ஆயிரத்து 356 ஆண்களும், 8 ஆயிரத்து 946 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் 3 என மொத்தம் 17 ஆயிரத்து 305 பேர்.

பள்ளிப்பட்டு பேரூராட்சியில் 15 வாக்குச்சாவடி மையங்களில், 3 ஆயிரத்து 773 ஆண்களும், 4 ஆயிரத்து 67 பெண்களும் என மொத்தம் 7 ஆயிரத்து 840 பேர்.

பொதட்டூர்பேட்டை

பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் 23 வாக்குச்சாவடி மையத்தில், 9 ஆயிரத்து 201 ஆண்களும், 9 ஆயிரத்து 645 பெண்களும் என மொத்தம் 18 ஆயிரத்து 846 பேர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2021 திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மொத்த 745 வாக்குச்சாவடி மையத்தில் 3 லட்சத்து 28 ஆயிரத்து 342 ஆண்களும், 3 லட்சத்து 37 ஆயிரத்து 85 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் 128 பேர் என மொத்தம் 6 லட்சத்து 65 ஆயிரத்து 555 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுதா, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கண்ணன், நகராட்சி ஆணையர்கள் ஸ்ரீராமஜெயம், நாராயணன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story