பழனி கிரிவீதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலை; வருவாய்த்துறையினர் அகற்ற முயன்றதால் பரபரப்பு


பழனி கிரிவீதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலை; வருவாய்த்துறையினர் அகற்ற முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 10 Dec 2021 9:15 PM IST (Updated: 10 Dec 2021 9:15 PM IST)
t-max-icont-min-icon

பழனி கிரிவீதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலையை வருவாய்த்துறையினர் அகற்ற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பழனி:
பழனி மேற்கு கிரிவீதியில் சாலையோர மரத்தடியில் அனுமதியின்றி விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்துள்ளதாக பழனி வருவாய்த்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வருவாய்த்துறை மற்றும் அடிவாரம் போலீசார் அங்கு சென்றனர். அப்போது அவர்கள் அனுமதியின்றி சிலை வைக்கக்கூடாது என கூறி சிலையை அகற்ற முயன்றனர். ஆனால் சிலையை அகற்ற அப்பகுதி கடைக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 
இதற்கிடையே இந்து முன்னணி அமைப்பினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து அதிகாரிகள், இந்து முன்னணி அமைப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. அதைத்தொடர்ந்து அமைதி பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதனால் அந்த சிலை அங்கேயே வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஜெகன் கூறுகையில், கடந்த பல ஆண்டுகளாக மரத்தடியில் சிறிய அளவிலான விநாயகர் சிலை வைத்து மக்கள் வழிபட்டு வந்தோம். அந்த சிலை சேதம் அடைந்ததால் தற்போது வேறு சிலையை பிரதிஷ்டை செய்தோம். எனவே அதை அகற்ற கூடாது என்றார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story