கோவில்பட்டி பலசரக்கு கடையில் பெண்ணை மிரட்டிய 4 பேர் கைது


கோவில்பட்டி பலசரக்கு கடையில் பெண்ணை மிரட்டிய 4 பேர் கைது
x
தினத்தந்தி 10 Dec 2021 9:22 PM IST (Updated: 10 Dec 2021 9:22 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் பலசரக்கு கடையில் கடனுக்கு பொருட்கள் தரமறுத்த பெண் வியாபாரிக்கு மிரட்டல் விடுத்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்

கோவில்பட்டி:
கோவில்பட்டியில் பலசரக்கு கடையில் கடனுக்கு பொருட்கள் தரமறுத்த பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
பலசரக்கு கடை
கோவில்பட்டி பாரதிநகர் மேட்டுத் தெருவைச்ஸசேர்ந்தவர் துரை (வயது 45). இவரது மனைவி பாக்கியலட்சுமி ( 42). இவர், அப்பகுதியில் பலசரக்கு கடை வைத்துள்ளார்.
 இவரது கடைக்கு அதேபகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களான ஆறுமுகவேல் மகன் சாந்தகுமார் (20), நடுத்தெருவைச் சேர்ந்த அந்தோணிசாமி மகன் ஜோஸ் (21), கண்ணன் மகன் கார்த்திக் (18) மற்றும் அருண்குமார் (28) ஆகியோர் வந்துள்ளனர்.
பெண்ணுக்கு மிரட்டல்
அப்போது  பாக்கியலட்சுமியிடம் கடனுக்கு பொருட்கள் கொடுக்குமாறு அந்த 4 பேரும் கேட்டனராம். 
அவர், கடனுக்கு பொருட்கள் கொடுக்க மறுத்ததால், ஆத்திர மடைந்த சாந்தகுமார் உள்ளிட்ட 4 பேரும் அவதூறாக பேசியுள்ளனர். திடீரென்று கடையில் பட்டாசை வெடித்து போட்டு அவருக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
4 வாலிபர்கள் கைது
இந்த சம்பவம் குறித்து பாக்கியலட்சுமி கோவில்பட்டி மேற்கு காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அரிகண்ணன் வழக்குப்பதிவு செய்து சாந்தகுமார் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தார். 

Next Story