திருமணமாகாமல் குழந்தை பெற்றேடுத்த கல்லூரி மாணவி; தலைமறைவான காதலனுக்கு வலைவீச்சு


திருமணமாகாமல் குழந்தை பெற்றேடுத்த கல்லூரி மாணவி; தலைமறைவான காதலனுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 10 Dec 2021 9:31 PM IST (Updated: 10 Dec 2021 9:31 PM IST)
t-max-icont-min-icon

சாணார்பட்டி அருகே திருமணமாகாமலேயே கல்லூரி மாணவி குழந்தை பெற்றேடுத்தார். அவரது காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.

கோபால்பட்டி;
சாணார்பட்டி அருகே உள்ள ராகலாபுரத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 21). இவரும், 18 வயது கல்லூரி மாணவியும் காதலித்து வந்தனர். திருமணம் ஆகாமலேயே 2 பேரும் அடிக்கடி நெருங்கி பழகினர். இதில், அந்த கல்லூரி மாணவி கர்ப்பமானார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த மாணவிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அப்போது வீட்டிலேயே அவர் ஆண் குழந்தையை பெற்றேடுத்தார். சிறிது நேரத்தில் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனே அவரை குடும்பத்தினர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இதற்கிடையே காதலிக்கு குழந்தை பிறந்தது குறித்து அறிந்த சந்தோஷ் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் தாய், சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மாணவியின் காதலன் சந்தோஷ் மீது போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story