திண்டுக்கல் அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
திண்டுக்கல் அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலியானார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லை அடுத்த எரியோடு ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நேற்று காலை வாலிபர் பிணம் கிடப்பதாக திண்டுக்கல் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சையதுகுலாம் தஸ்தகீர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் இறந்தவர், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா கொத்தமங்கலத்தை சேர்ந்த கார்த்திக்ராஜா (வயது 20) என்பதும், நேற்று முன்தினம் இரவு நெல்லையில் இருந்து தாதர் நோக்கி சென்ற தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்ததும் தெரியவந்தது. மேலும் ரெயில் திண்டுக்கல்லை கடந்ததும் அவர் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்ததும், எரியோடு அருகே ரெயில் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து பலியானதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
Related Tags :
Next Story