50 ஆயிரத்து 245 வாக்காளர்கள்


50 ஆயிரத்து 245 வாக்காளர்கள்
x
தினத்தந்தி 10 Dec 2021 10:14 PM IST (Updated: 10 Dec 2021 10:14 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் நகராட்சி தேர்தலில் 50 ஆயிரத்து 245 வாக்காளர்கள் உள்ளனர் என நகராட்சி ஆணையர் பிரபாகரன் கூறினார்.

திருவாரூர்:
திருவாரூர் நகராட்சி தேர்தலில் 50 ஆயிரத்து 245 வாக்காளர்கள் உள்ளனர் என நகராட்சி ஆணையர் பிரபாகரன் கூறினார்.
வாக்காளர் பட்டியல் வெளியீடு
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான 4 நகராட்சிகள் மற்றும் 7 பேரூராட்சிகளின் 216 வார்டுகளில் நடைபெற உள்ள தேர்தல்களுக்கான வாக்காளர் பட்டியலை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் நேற்று முன்தினம் வெளியிட்டார். அதனை தொடர்ந்து திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் பிரபாகரன் கூறியதாவது:-
15 வார்டுகள் பொது இடஒதுக்கீடு
திருவாரூர் நகராட்சி நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திருவாரூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இதில் 13 வார்டுகள் பொது இடஒதுக்கீடு, 13 வார்டுகள் பெண்களுக்கான ஒதுக்கீடு, 2 வார்டுகள் எஸ்.சி. பெண்கள் ஒதுக்கீடு, 2 வார்டுகள் எஸ்.சி. பொது இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் 23 ஆயிரத்து 838 ஆண்கள், 26 ஆயிரத்து 405 பெண்கள், மூன்றாம் பாலினத்தர் 2 என 50 ஆயிரத்து 245 வாக்காளர்கள் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது நகராட்சி மேலாளர் முத்துக்குமார் உடனிருந்தார்.

Next Story