தினத்தந்தி புகார் பெட்டி
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் கூறப்பட்டுள்ளது.
கால்நடை ஆஸ்பத்திரி வேண்டும்
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் மகாராஜபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பெரும்பாலானவர்கள் கால்நடைகள் வளர்த்து வருகின்றனர். தற்போது மழைக்காலம் என்பதால் கால்நடைகள் தொற்று நோய்களால் அவதிப்பட்டு வருகிறது. இந்த கிராமத்தில் கால்நடை ஆஸ்பத்திரி இல்லாததால் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மகாராஜபுரம் கிராமத்தில் ஈமச்சடங்கு செய்வதற்கு கட்டிடமும் இல்லை. இதனால் இறந்தவர்களுக்கு ஈமச்சடங்குகள் செய்யமுடியாத நிலை உள்ளது. எனவே, மகாராஜபுரத்தில் கால்நடை ஆஸ்பத்திரி மற்றும் ஈமச்சடங்கு செய்வதற்கான கட்டிடம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-இளஞ்செழியன், மகாராஜபுரம்.
Related Tags :
Next Story