பகவதியம்மன் கோவிலில் வலியபடுக்கை பூஜை
மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் வலியபடுக்கை பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மணவாளக்குறிச்சி,
மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் வலியபடுக்கை பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பெண்களின் சபரிமலை
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. இங்கு கேரள பெண் பக்தர்கள் இருமுடிக்கட்டி வந்து அம்மனை வழிபடுவதால் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.
இந்த கோவிலில் மாசிக்கொடை விழா 10 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெறும். இந்த கோவிலில் மகா பூஜை என்னும் வலியபடுக்கை பூஜை முக்கிய வழிபாடாக கருதப்படுகிறது. இந்த பூஜை ஆண்டுக்கு 3 முறை மட்டுேம நடைபெறும். அதாவது, மாசிக்கொடையின் 6-ம் நாளிலும், பங்குனி மாதம் மீனபரணி கொடைவிழாவன்றும், கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்றும் இந்த வழிபாடு நடைபெறும்.
வலிய படுக்கை பூஜையின்போது நள்ளிரவில் அம்மனுக்கு மிகவும் பிடித்தமான பழ வகைகள், தேன், தினை மாவு, கரும்பு, அவல், பொரி ஆகியவகைகள் பெரும் படையலாக படைத்து வழிபடுவார்கள்.
கேரள பக்தர்கள்
இந்த ஆண்டில் 3-வது வலிய படுக்கை பூஜை நேற்று நள்ளிரவு நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷ பூஜை, நண்பகல் 12.30 மணிக்கு உச்ச கால பூஜை, அன்னதானம், மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜை, நள்ளிரவு 12 மணிமுதல் 1 மணிக்குள் வலிய படுக்கை பூஜை போன்றவை நடந்தது. இதில் கேரள மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிப்பட்டனர்.
Related Tags :
Next Story