தேர்தல் விழிப்புணர்வு போட்டி
தேர்தல் விழிப்புணர்வு போட்டி
நாகர்கோவில்,
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
12-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு போட்டி ஜனவரி 25-ந் தேதி அன்று நடத்தப்பட இருக்கிறது. இதில் ஓவியப் போட்டி, தேர்தல் விழிப்புணர்வு சுவரொட்டி தயாரித்தல், ஸ்லோகன் எழுதுதல், பாட்டு போட்டி, குழு நடனம், கட்டுரை எழுதுதல் முதலியவை 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் என தனித்தனி பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படவுள்ளது. இதற்காக அந்தந்த கல்வி நிறுவனங்கள் வாயிலாக அல்லாத மாணவர்கள் www.elections.tn.gov.in அலுவலக இணையதள முகவரியில் தங்களது படைப்புகளை பதிவேற்றம் செய்யலாம்.
ஜனநாயக நாட்டில் தேர்தலின் முக்கியத்துவம், 100 சதவீதம் வாக்குப்பதிவு, வாக்காளர் உதவி கைப்பேசி செயலி, சுய ஓட்டுரிமை மற்றும் கட்டுரை போட்டியில் ஒரு வாக்காளராக எனது பங்களிப்பு எனும் தலைப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரு பக்கம் அல்லது 200 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். தேர்தல் விழிப்புணர்வு போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களை தொடர்பு கொண்டு போட்டியில் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story