காட்பாயில் ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு


காட்பாயில் ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 10 Dec 2021 11:22 PM IST (Updated: 10 Dec 2021 11:22 PM IST)
t-max-icont-min-icon

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

காட்பாடி

குடியாத்தம் அருகே சேத்துவண்டை பகுதியை சேர்ந்தவர் பத்மாவதி (வயது 65). இவர் நேற்று காட்பாடியில் உள்ள ராணுவ படை வீரர் கேண்டீனில் தனது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கினார். பின்னர் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் வந்து, தனியார் பஸ்சில் 4 கைப்பைகளுடன் ஏறினார். காட்பாடி- குடியாத்தம் ரோடு அருகே பஸ் சென்றபோது தன் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலி காணாமல் போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே பத்மாவதி கத்தி கூச்சலிட்டார். குடியாத்தம் ரோடு பகுதியில் பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். ஆனால் தங்க சங்கிலி கிடைக்கவில்லை.

இந்த சம்பவம் குறித்து காட்பாடி போலீஸ் நிலையத்தில் பத்மாவதி புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி வழக்குப்பதிவு செய்து பத்மாவதி கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்து சென்றது யார் என விசாரணை நடத்தி வருகிறார். 


Next Story