உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தில் கோரிக்கைகளை தெரிவிக்கலாம். கலெக்டர் அமர்குஷ்வாஹா தகவல்
திருப்பத்தூர் மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தில் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என்று கலெக்டர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தில் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என்று கலெக்டர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நலத்திட்ட உதவிகள்
தமிழக முதல்-அமைச்சர் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் என்ற திட்டத்தை செயல்படுத்த ஒரு புதிய துறையை உருவாக்கி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
இத்திட்டத்தின் கீழ், திருப்பத்தூர் மாவட்டத்தில் 2,218 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அதில் 2218 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. 477 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 32 நபர்களுக்கு குடும்ப அட்டை, சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 122 நபர்களுக்கு ரூ.14 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் 6 நபர்களுக்கு ரூ.8. லட்சம் மதிப்பிலான வேலை வாய்ப்பற்றோருக்கான உதவிகள், ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் 280 நபர்களுக்கு ரூ.1 கோடியே 22 லட்சம் மதிப்பிலான நலதிட்ட உதவிகள் என மொத்தம் 1,741 நபர்களுக்கு ரூ.1 கோடியே 48 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
கோரிக்கைகளை தெரிவிக்கலாம்
இந்த திட்டத்தில் பயன்பெற இணையதள முகவரியிலும், 1100 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு அழைத்து பொது மக்கள் தங்களின் கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தனித்துணை கலெக்டர் அலுவலகத்தை பொது மக்கள் அணுகி பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story