கட்டிட மேஸ்திரியிடம் ஏ.டி.எம். கார்டை மாற்றிக் கொடுத்து ரூ.34 ஆயிரம் மோசடி. வாலிபர் கைது


கட்டிட மேஸ்திரியிடம் ஏ.டி.எம். கார்டை மாற்றிக் கொடுத்து ரூ.34 ஆயிரம் மோசடி. வாலிபர் கைது
x
தினத்தந்தி 10 Dec 2021 11:23 PM IST (Updated: 10 Dec 2021 11:23 PM IST)
t-max-icont-min-icon

வாலாஜாவில் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம்செலுத்த வந்த கட்டி மேஸ்திரியிடம் ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து ரூ.34 ஆயிரம்மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வாலாஜா

வாலாஜாவில் ஏ.டி.எம். எந்திரத்தில் பணம்செலுத்த வந்த கட்டி மேஸ்திரியிடம் ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து ரூ.34 ஆயிரம்மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கார்டை மாற்றிக்கொடுத்து மோசடி

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த வாங்கூர் முதலியார் தெருவை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 44), கட்டிட மேஸ்திரி. இவர் ரூ.34 ஆயிரத்து 500 எடுத்துக்கொண்டு வாலாஜாவில் இயங்கி வரும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில், ஏ.டி.எம். என்திரம் மூலம் செலுத்த வந்துள்ளார். ஏ.டி.எம். எந்திரத்தில்  பணம் செலுத்த தெரியாததால் அங்கிருந்த வாலிபர் ஒருவரிடம் தனது வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்தும்படி உதவி கேட்டுள்ளார்.
 
அதன்படி அந்த வாலிபர் அருணாசலத்திடம் இருந்து ஏ.டி.எம். கார்டை பெற்று, பணத்தை செலுத்திவிட்டு தான்வைத்திருந்த மற்றொரு போலியான ஏ.டி.எம். கார்டை அருணாசலத்திடம் கொடுத்துள்ளார். அதைபெற்றுக்கொண்டு அருணாசலம் அங்கிருந்து சென்றுவிட்டார்.  பின்பு சிறிது நேரத்தில் தனது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதாக அருணாசலம் போனுக்கு தகவல் வந்துள்ளது. இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அவர் வாலாஜா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

 வாலிபர் கைது

இந்த நிலையில் நேற்று அருணாசலம் வாலாஜாவில் உள்ள அதே வங்கிக்கு வந்துள்ளார். அப்போது சம்பவத்தன்று தனது வங்கி கணக்கில் பணம் செலுத்திய நபர் அங்கு இருப்பதை கண்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை பிடித்து வாலாஜா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் பாணாவரம் பகுதியைச் சேர்ந்த வடிவேல் (32) என்பது தெரிந்தது. மேலும், ஏ.டி.எம். கார்டை மாற்றிக்கொடுத்து பணம் எடுத்ததையும் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து 10-க்கும் மேற்பட்ட போலி ஏ.டி.எம். கார்டுகள்,  ரூ.25 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட வடிவேல் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டு அரக்கோணம் போலீசாரால் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story