மோகனூரில் கடத்தி வரப்பட்ட 229 கிலோ குட்கா வேனுடன் பறிமுதல்-மளிகை கடைக்காரர்கள் உள்பட 4 பேர் கைது


மோகனூரில் கடத்தி வரப்பட்ட 229 கிலோ குட்கா வேனுடன் பறிமுதல்-மளிகை கடைக்காரர்கள் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 10 Dec 2021 11:29 PM IST (Updated: 10 Dec 2021 11:29 PM IST)
t-max-icont-min-icon

மோகனூரில் கடத்தி வரப்பட்ட 229 கிலோ குட்கா வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மளிகை கடைக்காரர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மோகனூர்:
229 கிலோ குட்கா கடத்தல்
மோகனூரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஓவியா, சுப்ரமணி மற்றும் போலீசார் பரமத்திவேலூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி வேனை நிறுத்தி, அதில் இருந்தவர்களிடம் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் ஆம்னி வேனில் சோதனை நடத்தினர். அதில் மூட்டை, மூட்டையாக 229 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
4 பேர் கைது
இதையடுத்து 229 கிலோ குட்காவை ஆம்னி வேனுடன் பறிமுதல் செய்த போலீசார், அதிலிருந்த 4 பேரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிரமாக விசாரித்தனர். அப்போது அவர்கள் மோகனூர் புது தெருவை சேர்ந்த மளிகை கடைக்காரர் சென்னியப்பன் (வயது 59), அதே பகுதியை சேர்ந்த மளிகை கடைக்காரர் வினோத், பேட்டபாளையம் டிரைவர் பிரின்ஸ் (23), சுப்பிரமணியபுரம் பெட்டி கடைக்காரர் குமார் (29) என்பது தெரியவந்தது. குட்கா கடத்தலில் மேலும் ஒருவருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மளிகை கடைக்காரர் உள்பட 4 பேரையும் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதிப்பு ரூ.2 லட்சத்து 29 ஆயிரம் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story