சி.ஐ.டி.யூ. போராட்டம்
சிவகாசியில் கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகாசி,
பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு குறைக்க வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. அமைப்பின் சார்பில் 10 நிமிட வாகன நிறுத்தம் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சிவகாசி பஸ் நிலையம் எதிரில் சி.ஐ.டி.யூ. அமைப்பினர் சார்பில் வாகன நிறுத்த போராட்டம் நடைபெற்றது. கையில் சி.ஐ.டி.யூ. அமைப்பினர் கொடிகளை ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷம் போட்டனர். இந்த போராட்டத்துக்கு மாவட்டக்குழு உறுப்பினர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தேவர், சுரேஷ்குமார், ஜோதிமணி, பழனி, ஜெபஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர். இவர்களை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story