காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த ஆசிரியரால் பெண் என்ஜினீயர் தற்கொலை
காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த ஆசிரியரால் பெண் என்ஜினீயர் தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்திவருகிறார்கள்.
ராமநாதபுரம்,
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பெண் என்ஜினீயர்
அவரிடம் ராமநாதபுரத்தில் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் சேக் முகம்மது என்ற அபு (27) அறிமுகமாகி பழகி செல்போன் எண்ணை வாங்கி பேசி வந்துள்ளார்.
சவுமியாவை காதலிப்பதாகவும், அவரை, திருமணம் செய்து கொள்வதாக கூறி நெருக்கமாக பழகியுள்ளார். அவரை தனது வீட்டுக்கும் வரவழைத்துள்ளார்.
இதன்பின்னர் திருமணம் செய்து கொள்ள சேக் முகம்மது மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதற்கிடையே இவர்களின் திருமணத்துக்கு முதலில் சம்மதம் தெரிவித்த சேக்முகம்மதுவின் பெற்றோர், பின்னர் சவுமியா அழகாக இல்லை, வரதட்சணை அதிகம் தர வேண்டும் என்று கூறி மறுத்துவிட்டார்களாம்.
தூக்குப்போட்டு தற்கொலை
இதுகுறித்து அவரது தந்தை முனியசாமி அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்தனர். சவுமியாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்வதற்கு முன்பாக சவுமியா எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில், தனது தற்கொலைக்கு சேக் முகம்மது மற்றும் அவருடைய பெற்றோர், திருப்பூரில் உள்ள மாமா ஆகியோர்தான் காரணம் என்றும், மேலும் பல்வேறு தகவல்களையும் எழுதி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள சேக் முகம்மது உள்ளிட்டோரை போலீசார் தேடிவருகின்றனர்.
தனது மகளின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யாமல் அவரது உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என்று முனியசாமி குடும்பத்தினர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து போலீசார் தனிப்படை அமைத்து தேடிவருவதாகவும், விரைவில் கைது செய்து விடுவோம் என உறுதி அளித்ததை தொடர்ந்து அவரது உடலை பெற்றுச்சென்றனர்.
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
---------
Related Tags :
Next Story