குட்கா, பான்மசாலா விற்பனையை தடுக்க கடைகள், குடோன்களில் போலீசார் திடீர் சோதனை


குட்கா, பான்மசாலா விற்பனையை தடுக்க கடைகள், குடோன்களில் போலீசார் திடீர் சோதனை
x
தினத்தந்தி 10 Dec 2021 11:41 PM IST (Updated: 10 Dec 2021 11:41 PM IST)
t-max-icont-min-icon

கடைகள், குடோன்களில் போலீசார் திடீர் சோதனை

வேலூர்

வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் கஞ்சா, குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் போதைப்பொருள் விற்கும் நபர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.

இந்த நிலையில் வேலூர் லாங்கு பஜாரில் உள்ள கடைகள், குடோன்களில் குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாகவும், அவை அங்கிருந்து பல்வேறு கடைகளுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில்  இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் வேலூர் லாங்குபஜாரில் உள்ள மொத்த, சில்லரை விற்பனை மளிகை கடைகள், பட்டாசு கடைகள் மற்றும் குடோன்களில் நேற்று திடீரென சோதனை மேற்கொண்டனர். 

கடை உரிமையாளர்களிடம் அரசால் தடை செய்யப்பட்டுள்ள போதைப்பொருட்களை பதுக்கி விற்பனை செய்தால் கைது செய்யப்படுவார்கள். மேலும் கடைக்கு ‘சீல்' வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா, குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்வது குறித்து தெரிய வந்தால் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தினர்.

Next Story