பன்றிகளால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்


பன்றிகளால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 10 Dec 2021 11:44 PM IST (Updated: 10 Dec 2021 11:44 PM IST)
t-max-icont-min-icon

பன்றிகளால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாயில்பட்டி, 
பன்றிகளால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
கண்மாய் நிரம்பியது 
வெம்பக்கோட்டை ஒன்றியம் அச்சங்குளம், வல்லம்பட்டி, பனையடிப்பட்டி, கோட்டைப்பட்டி, ஆண்டியாபுரம், கொம்மங்கிபுரம், சூரார்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கண்மாய்கள் முழுமையாக நிறைந்துள்ளன.
 மேற்கண்ட பகுதிகளில் மக்காச்சோளம், தட்டாம்பயறு, பாசிப்பயறு உள்ளிட்ட பயறு வகைகள், சீனி அவரைக்காய் செடிகள் 200 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அவ்வப்போது சாரல் மழை பெய்வதால் பயிர்கள் செழிப்பாக வளர்ந்துள்ளன. விவசாயிகளும் களை எடுப்பது, தண்ணீர் பாய்ச்சல், மருந்து தெளித்தல் உள்ளிட்ட விவசாய பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். 
நிவாரணம் 
மக்காச்சோள  பயிர்கள் தற்போது கதிர் விட்டு, இன்னும் அறுவடைக்கு ஒரு மாதமே இருக்கும் நிலையில் உள்ளது. இந்தநிலையில் காட்டு விலங்குகளான மான், காட்டுப்பன்றிகள், முள்ளம்பன்றிகள் ஆகியவை இந்த பயிர்களை சேதப்படுத்தி விட்டது. 
இதனால் விவசாயிகள் கடினப்பட்டு வளர்த்த பயிர்களில் மகசூல் பெற முடியாத நிலை உள்ளதால் வேதனையில் உள்ளனர். சென்ற ஆண்டும் வன விலங்குகளால் சேதமான பயிர்களுக்கு நஷ்டஈடு வழங்கவில்லை எனவும், இதனை உடனே வழங்க வேண்டும். அதேபோல இந்த ஆண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story