கடைகளில் பதுக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
கடைகளில் பதுக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தாமரைக்குளம்:
அரியலூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து உள்ளதாக வந்த புகார்களை தொடர்ந்து, வணிக நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள் உள்ளிட்டவற்றில் ஆய்வு நடத்த நகராட்சி ஆணையருக்கு, கலெக்டர் ரமணசரஸ்வதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அரியலூர் நகரில் துப்புரவு ஆய்வாளர் தீபன் சக்ரவர்த்தி தலைமையில் நகராட்சி ஊழியர்கள், மேற்பார்வையாளர் செந்தில், அரியலூர் நகராட்சி அதிகாரிகள் ஆகியோர் அரியலூர் நகர கடைவீதியில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது கடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்ததற்காகவும், முககவசம் அணியாததற்காகவும், வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டது. பொதுமக்கள் கடைவீதிக்கு துணிப் பைகளை எடுத்து வருமாறு அறிவுறுத்தப்பட்டது.
Related Tags :
Next Story