3 மணி நேரம் இருளில் மூழ்கிய சிவகாசி பஸ் நிலையம்


3 மணி நேரம் இருளில் மூழ்கிய சிவகாசி பஸ் நிலையம்
x
தினத்தந்தி 11 Dec 2021 12:26 AM IST (Updated: 11 Dec 2021 12:26 AM IST)
t-max-icont-min-icon

தீ விபத்தினால் 3 மணி நேரம் இருளில் மூழ்கியது சிவகாசி பஸ் நிலையம்.

சிவகாசி,
சிவகாசி நகரின் மையப் பகுதியில் மாநகராட்சி பஸ் நிலையம் உள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்த பகுதியில் இருக்கும் ஒரு மின் கம்பத்தில் நேற்று மாலை திடீரென மின்சார கம்பிகள் ஒன்றோடு ஒன்று உராய்வு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி முழுவதும் மின் தடை ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மின்கம்பத்தில் ஏறி பழுதை சரி செய்ய முயன்றனர். சுமார் 3 மணி நேரம் இப்பணி நடைபெற்றது. அதுவரை அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டது. சிவகாசி பஸ் நிலையம் மற்றும் காந்தி ரோடு, சாத்தூர் ரோடு ஆகிய பகுதியில் 3 மணி நேரம் மின்சாரம் இல்லாமல்  இருளில் மூழ்கியது.

Related Tags :
Next Story