ஆஞ்சநேயர் கோவில் அகற்றம்; பா.ஜனதாவினர் சாலை மறியல்


ஆஞ்சநேயர் கோவில் அகற்றம்; பா.ஜனதாவினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 11 Dec 2021 12:34 AM IST (Updated: 11 Dec 2021 12:34 AM IST)
t-max-icont-min-icon

காளையார்கோவிலில் புதிதாக கட்டப்பட்ட ஆஞ்சநேயர் கோவிலை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர். இதை கண்டித்து மறியலில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் 113 பேரை போலீசார் கைது செய்தனர்.

காளையார்கோவில்,

காளையார்கோவிலில் புதிதாக கட்டப்பட்ட ஆஞ்சநேயர் கோவிலை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றினர். இதை கண்டித்து மறியலில் ஈடுபட்ட பா.ஜனதாவினர் 113 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆஞ்சநேயர் கோவில்

காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோவில் தெப்பக்குளக்கரையில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி ஆஞ்சநேயர் கோவில் கட்டி இருப்பதாக புகார் வந்தது. இதையடுத்து காளையார்கோவில் தாசில்தார் பாலகிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் இளையராஜா, மாநில நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சையது இப்ராஹிம், உதவி பொறியாளர் அக்பர் அலி ஆகியோர் முன்னிலையில் கோவில் அகற்றப்பட்டது.
அதில் உள்ள ஆஞ்சநேயர் சிலையை மீட்டு தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.அப்போது சிவகங்கை துணை சூப்பிரண்டு பால்பாண்டி, காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் பாண்டி ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

113 பேர் கைது

 அப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்த 9 பேரை காளையார்கோவில் போலீசார் கைது செய்தனர்.இச்சம்பவத்தை கண்டித்து மாலையில் காளையார்கோவில் பஸ் நிலையத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர் சக்தி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 113 பேர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் இரவு விடுவிக்கப்பட்டனர்

Next Story