450 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்


450 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 11 Dec 2021 12:36 AM IST (Updated: 11 Dec 2021 12:36 AM IST)
t-max-icont-min-icon

450 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தா.பழூர்:

பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராஜ் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி, மெக்கேல்பட்டி, கோட்டியால், சிந்தாமணி ஆகிய ஊர்களில் உள்ள பலசரக்கு கடைகள், இறைச்சி கடைகள், இனிப்பு கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவை உள்ளதா? என்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் 8 கடைகளில் இருந்து 450 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யவோ, பயன்படுத்தவோ கூடாது என்றும், பொதுமக்களுக்கு வழங்கக்கூடாது என்றும் கடைக்காரர்களுக்கு, அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர்.
அபராதம்
மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட கடைகளுக்கு ரூ.2 ஆயிரத்து 600 அபராதமாக விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டது. ஆய்வின்போது துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோவன், செந்தில்குமார், சத்யராஜ், சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story