யோகாவில் மாணவி சாதனை


யோகாவில் மாணவி சாதனை
x
தினத்தந்தி 11 Dec 2021 12:37 AM IST (Updated: 11 Dec 2021 12:37 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகரில் யோகாவில் மாணவி சாதனை படைத்தார்.

விருதுநகர், 
விருதுநகர் சரஸ்வதி மெட்ரிக் பள்ளியில் யு.கே.ஜி. பயிலும் மாணவி ஹாசினி (வயது4) உலக சாதனைபதிவிற்காக யோகாசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. நோபல் உலக சாதனை நிறுவன நிர்வாக இயக்குனர்கள் அரவிந்த், திருஞானராமன், பயிற்றுனர் மாலினி ஆகியோர் முன்னிலையில் இம்மாணவி முட்டை மீது கால் பதித்து 31.23 நிமிடங்கள் சமோகோனாசானம் என்ற யோகாசனம் செய்தார். இதற்கு முன்பு 23 நிமிடமே உலக சாதனையாக பதிவாகி உள்ளது. மாணவி ஹாசினியின்சாதனையை தொழிலதிபர் முத்துமணி பாராட்டினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அரிமா சங்க நிர்வாகிகள் மற்றும் பள்ளி தாளாளர் திலீபன் ஆகியோர் செய்திருந்தனர்


Next Story