கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
கறம்பக்குடி
கறம்பக்குடி அருகே உள்ள மருதன்கோன் விடுதி நால்ரோட்டில் அரசு கலை அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு, 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று வழக்கம்போல் கல்லூரிக்கு சென்ற மாணவர்கள் மதியம் 12 மணியளவில் வகுப்புகளை புறக்கணித்து நால்ரோடு பிரதான சாலையில் திரண்டனர். பின்னர் அங்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். 10 நிமிட போராட்டத்துக்கு பின் அனைவரும் மீண்டும் கல்லூரிக்கு சென்றனர். இதேபோல கறம்பக்குடியில் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் சீனி கடைமுக்கம், அம்புக்கோவில் முக்கம், அக்ரஹாரம், திருமணஞ்சேரி விலக்கு சாலை, ரெகுநாதபுரம் உள்ளிட்ட 10 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராகவும், எரிபொருட்களின் விலையை குறைக்க வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.
Related Tags :
Next Story