கஞ்சா வழக்கில் 4 பெண்கள் கைது
கஞ்சா வழக்கில் 4 பெண்கள் கைது செய்யப்பட்டனர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 30-ந் தேதி ஒரு வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 140 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். அதனை பதுக்கி வைத்த ஜானகி, அவரது கணவர் அய்யப்பன் மற்றும் மதுரையை சேர்ந்த செல்வி ஆகியோரை திருக்கோகர்ணம் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை திருக்கோகர்ணம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பூர்விகா உள்பட தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய திருக்கோகர்ணம் பகுதியை சேர்ந்த கமலம் (வயது 72), அவரது மகள்கள் வசந்தி (51), வனிதா (49) மற்றும் பிரியதர்ஷினி (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
தலைமறைவு
கைதானவர்கள் பற்றி போலீசார் கூறுகையில், 140 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பிரியதர்ஷினியின் கணவரான வினோத்தை தேடி வருகிறோம். அவர் தலைமறைவாக உள்ளார். கைதானவர்களில் செல்வியை தவிர அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். கைதான வசந்தியின் மகன் தான் வினோத். அவரது மனைவி தான் பிரியதர்ஷினி. இவர்கள் புதுக்கோட்டை, திருச்சியில் ஆங்காங்கே வீடு வாடகைக்கு எடுத்து தங்கி கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளனர். பல ஆண்டுகளாக அவர்கள் இதனை தொழிலாக செய்துவந்துள்ளனர். ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வரவழைத்து விற்பதே இவர்களது தொழிலாகும், என்றார்.
Related Tags :
Next Story