தினத்தந்தி புகார் பெட்டி


புதுக்கோட்டை
x
புதுக்கோட்டை
தினத்தந்தி 11 Dec 2021 12:48 AM IST (Updated: 11 Dec 2021 12:48 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சேறும், சகதியுமான சாலை
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், குண்டவெளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட குண்டவெளி கன்னியம்மன் தெருவில் தற்போது பெய்த மழையின் காரணமாக சாலை சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள்,  குண்டவெளி, அரியலூர்.

கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை
பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பயிலும் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்து செல்வதற்கு போதிய அரசு டவுன் பஸ் வசதி இல்லை. இதனால் தற்போது இயக்கப்பட்டு வரும் அரசு டவுன் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால் மாணவ-மாணவிகள் படிக்கட்டில் நின்றவாறு ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளி வேலை நாட்களில் காலை, மாலை நேரங்களில் மாணவ-மாணவிகளின் நலன் கருதி கூடுதல் அரசு டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
கார்த்திகேயன், குன்னம், பெரம்பலூர். 

சுகாதாரமற்ற பொது கழிப்பறை 
புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் உள்ள ஆண்கள் இலவச பொது  கழிப்பறை பல மாதங்களாக சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், புதுக்கோட்டை. 

பாலத்தின் அணைக்கட்டில் விரிசல்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா திருமணஞ்சேரி அக்னி ஆற்றங்கரை பாலத்தின் அணைக்கட்டு விரிசல் விட்டு இடிந்து காணப்படுகிறது. ஆற்றங்கரையில் அதிக அளவில் தண்ணீர் வந்தால் இந்த அணையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வயல்வெளிகளிலும், ஊருக்குள்ளும் புகும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், திருமணஞ்சேரி, புதுக்கோட்டை. 

நாய்களால் விபத்து ஏற்படும் அபாயம்
கரூர் மாவட்டம், வேட்டமங்களம் கிராமம், குந்தாணிபாளையம் பகுதியில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் படுத்துக்கொள்வதினாலும், சண்டையிட்டுக்கொள்வதினாலும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் பள்ளி செல்லும் குழந்தைகளை கடிக்க வருவதுடன் இவை சாலையின் குறுக்கே திடீரென ஓடுவதினால் வாகனங்கள் விபத்தில் சிக்கிக்கொள்ளும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், குந்தாணிபாளையம், கரூர்.

டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம் வெற்றியூர் கிராமம் கீழத் தெருவில் புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலையின் இருபுறங்களிலும் சரியான முறையில் வடிகால் வசதி அமைக்காத காரணத்தால் கடந்த ஒரு மாதங்களாக மழைநீர் தேங்கி உள்ளன.  இதில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகி அப்பகுதி மக்களுக்கு காய்ச்சல், டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இப்பகுதியில் தெருவிளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் அப்பகுதியில் மக்கள் நடந்து செல்லக்கூட சிரமப்படுகிறார்கள். இருளைப் பயன்படுத்தி சட்ட விரோத செயல்களும் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், வெற்றியூர், திருச்சி. 

சுரங்கப்பாதை அமைக்கப்படுமா? 
திருச்சி மாவட்டம்,  வையம்பட்டி ரெயில் நிலையத்தில் திருச்சியில் இருந்து திண்டுக்கல் செல்லும் ரெயில்வே இரும்பு பாதையில் பயணிகள் இறங்கி நடந்து செல்லும் வகையில் சுரங்கப்பாதை வசதி இல்லை. இதனால் ரெயில்வே இரும்பு பாதையை குறுக்கே கடந்துதான் வெளியே வர வேண்டியநிலை உள்ளது. மேலும் நடைபாதையில் இரவில் விளக்குகள் எரிவதில்லை. இதனால் பயணிகள் இரவு நேரத்தில் மிகவும் சிரமப்பட்டு ரெயில்வே இரும்பு பாதையை குறுக்கே கடந்து வெளியே வர வேண்டிய நிலை  உள்ளது. வயதானவர்கள் பாதையை கடப்பதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது.  எனவே வையம்பட்டி ரெயில் நிலையத்தில் சுரங்கப்பாதை மற்றும் மின் விளக்கு வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்ட ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
முகம்மது மைதீன், வையம்பட்டி, திருச்சி. 

கூடுதல் பஸ் வசதி வேண்டும் 
திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து  துவாக்குடிக்கும், துவாக்குடியில் இருந்து சத்திரம் பஸ் நிலையத்திற்கும் கூடுதல் பஸ் வசதி இல்லாததால்  பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் படிக்கட்டில் நின்றவாறு பயணம் செய்யும் நிலை உள்ளது. பஸ் செல்லும்போது மாணவர்கள் கீழே விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், திருவெறும்பூர், திருச்சி.

குண்டும், குழியுமான சாலை 
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், தாளக்குடி முத்தமிழ் நகர் அருகே உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் திடீரென வாகனத்தை விட்டு நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், தாளக்குடி, திருச்சி. 

மணல் கொள்ளை தடுக்கப்படுமா? 
திருச்சி மாவட்டம், முசிறி நகராட்சிக்குட்பட்ட மேல சாலியார் தெரு காவிரி ஆற்றில் பல மாதங்களாக காலை, மாலை என மணலை சாக்கு பைகளில் மூட்டைகளாக அள்ளிச்செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பள்ளங்கள் ஏற்பட்டு, மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகள், மாடுகள் குழியில் இறங்கி பலியாகி விடுகின்றன. அதுமட்டுமல்லாமல் குளிப்பதற்கு செல்லும் மக்களும் இப்பள்ளங்களில் இறங்கும் அபாயம் உள்ளது. எனவே அரசு அதிகாரிகள் இதனை கண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்  என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், மேல சாலியார் தெரு, திருச்சி. 

போக்குவரத்து நெரிசல் 
திருச்சி பீமநகர் செடல்மாரியம்மன் கோவில் சாலையில் காலை, மாலை வேளையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பள்ளி வாகனங்கள், பஸ்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெரிசலை  சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், பீமநகர், திருச்சி. 

வேளாண் ரெயில் இயக்க கோரிக்கை 
திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள விவசாய பொருட்களை சென்னைக்கு கொண்டு செல்லும் வகையில், கோவையில் இருந்து தொட்டியம் வழியாக சென்னை செல்லும் வகையில் வேளாண் ரெயில் இயக்க வேண்டும். இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் பெரிதும் பயன்அடைவார்கள். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சண்முகவேல், கூன்ராக்கம்பட்டி, திருச்சி. 

சுற்றித்திரியும் மாடுகளால் அவதி
திருச்சி காந்திமார்க்கெட் பகுதிக்கு அதிகாலை முதலே ஏராளமான சிறு வியாபாரிகளும், பொதுமக்களும் காய்கறிகள் வாங்குவதற்காக வந்து செல்கிறார்கள். காந்திமார்க்கெட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலையில் இருந்தே மாடுகள் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சத்துடனே செல்ல வேண்டி இருக்கிறது. ஏற்கனவே பலமுறை காய்கறி வாங்க வந்த பொதுமக்களை மாடு முட்டி படுகாயம் அடைந்த சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. ஆகவே காந்திமார்க்கெட் பகுதியில் சுற்றி திரியும் மாடுகளை அப்புறப்படுத்த மாநகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சுதாகர், அரியமங்கலம், திருச்சி.

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
திருச்சிக்கு பெருமை சேர்க்கும் நுழைவாயில் அடையாளமாக சிந்தாமணி படித்துறைகள் ஆகும். இதில் காவிரி தென்கரை பகுதிகளான குடமுருட்டி தொடங்கி மேல சிந்தாமணி, கீழ சிந்தாமணி, ஓடத்துறை, தேவதானம் வரையில் சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்தில் அரசு பொது நிலத்திற்கு உரிய காவிரி தென்கரை மண்டபங்கள், படித்துறைகள், இடைவெளி பகுதிகள், நீர் வழி படுகை பகுதிகள் அனைத்திலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை மீட்டு தூய்மை படுத்தி அழகு படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், சிந்தாமணி, திருச்சி. 

கோமாரி நோயால் பாதிக்கப்படும் கால்நடைகள் 
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள  பகுதியில் ஏராளமான விவசாயிகள் கால்நடைகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் பெரிதும் வேதனை அடைந்துள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, இப்பகுதியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், உப்பிலியபுரம், திருச்சி. 


Next Story