விசைப்படகு உரிமையாளர் வீட்டில் கொள்ளை:மர்ம நபர்களை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு
குளச்சல் அருகே விசைப்படகு உரிமையாளர் வீட்டில் கொள்ளையடித்த மர்ம நபர்களை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
குளச்சல்,
குளச்சல் அருகே விசைப்படகு உரிமையாளர் வீட்டில் கொள்ளையடித்த மர்ம நபர்களை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
விசைப்படகு உரிமையாளர்
குளச்சல் அருகே உள்ள வாணியக்குடியைச் சேர்ந்தவர் ஆன்டணி பாபு (வயது 48), மீனவர். இவர் கேரளாவில் சொந்தமாக விசைப்படகு வைத்து மீன்பிடி தொழில் செய்து வருகிறார். தற்போது, கேரளாவில் இருந்து ஊருக்கு வந்துள்ளார்.
சம்பவத்தன்று இரவு 7 மணிக்கு ஆன்டணி பாபு தனது மனைவி மற்றும் மகள்களுடன் அருகில் உள்ள குருசடி திருவிழாவுக்கு சென்றார். பின்னர், இரவு 9 மணிக்கு அவர்கள் வீட்டுக்கு திரும்பினர்.
அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும், பீரோ லாக்கரில் வைத்திருந்த 82¾ பவுன் நகைகள் கொள்ளையடிக்க பட்டிருந்தது.
ஆன்டணி பாபு குடும்பத்துடன் வெளியே செல்வதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
4 தனிப்படை அமைப்பு
இதுகுறித்து குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆன்டணி பாபு குடும்பத்தைப் பற்றி நன்கு அறிந்த உள்ளூர் நபர்கள் தான் கொள்ளையில் ஈடுபட்டிருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர்.
கொள்ளையர்களை பிடிக்க குளச்சல் போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கராமன், இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜான் போஸ்கோ, சனல்குமார் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story