மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்


மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
x
தினத்தந்தி 11 Dec 2021 1:20 AM IST (Updated: 11 Dec 2021 1:20 AM IST)
t-max-icont-min-icon

கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

மதுரை, 
கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.
மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில்
மதுரை அருகே  உள்ளது மடப்புரம். இங்கு அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தென்மாவட்ட அளவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
 இந்த கோவிலில் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு பூஜைகளும், மற்ற நாட்களில் அபிஷேக அலங்கார பூஜையும் நடைபெறும். இதேபோல் ஒவ்வொரு பவுர்ணமி, ஆடி மாதம் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகளும் நடைபெறும். 
பக்தர்கள் குவிந்தனர்
சிறப்பு பூஜைகள் நடைபெறும் போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். சிலர் அம்மனுக்கு எலுமிச்சம்பழம் மாலை, சேலைகள் சாத்தி சாமி கும்பிட்டு செல்வார்கள்.
இந்த நிலையில் நேற்று கார்த்திகை மாதத்தின் கடைசி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். மதியம் நடைபெற்ற உச்சிகால பூஜையின் போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story