சொகுசு காரில் 180 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது


சொகுசு காரில் 180 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது
x
தினத்தந்தி 11 Dec 2021 1:26 AM IST (Updated: 11 Dec 2021 1:26 AM IST)
t-max-icont-min-icon

சொகுசு காரில் 180 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

மதுரை, 
மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் உதவி கமிஷனர் சண்முகம் தலைமையிலான தனிப்படை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ஒரு சொகுசு காரில் அரசு தடை செய்த புகையிலை, பாக்கு போன்றவற்றை விற்பனைக்கு கொண்டு வருவதாக தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அந்த வழியாக வந்த ஒரு சொகுசு காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது அதில் 12 மூடைகளில் 180 கிலோ எடை கொண்ட புகையிலை, பாக்கு போன்ற பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
மேலும் அந்த காரில் இருந்த மதுரை மாவட்டம் பரம்புபட்டி, பிரேம்நகரை சேர்ந்த மணி (வயது 37) என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் காரில் கடத்தி வந்து நகரில் உள்ள பல்வேறு கடைகளுக்கு புகையிலை, பாக்கு போன்றவற்றை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இது குறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியை கைது செய்து, காருடன் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் விரைந்து செயல்பட்ட உதவி கமிஷனர் சண்முகம், தனிப்படை போலீசார் கணேசன், துரைமுருகன், கண்ணு ஆகியோரை போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த்சின்கா பாராட்டினார்.

Related Tags :
Next Story