ராஜகோபால சுவாமி கோவிலில் கோபூஜை
பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவிலில் கோபூஜை நடந்தது.
நெல்லை:
பாளையங்கோட்டையில் அழகிய மன்னர் ராஜகோபால சுவாமி கோவில் உள்ளது. இங்கு மூலவராக வேதவல்லி, குமுதவல்லி, சமேத வேதநாராயணர் அருள்பாலிக்கிறார். மூல விமானத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத அழகிய மன்னார் மற்றும் உற்சவர் ருக்மணி, சத்யபாமா, சமேத ராஜகோபாலசாமி என 3 கோலங்களில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
இக்கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டியும், உலக மக்கள் நன்மைக்காகவும், கொரோனா தொற்று முற்றிலும் ஒழிய வேண்டியும் நேற்று 108 கோ பூஜை நடந்தது. இதையொட்டி ராஜகோபால சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனையும் நடந்தது. பின்னர் கோ பூஜை நடந்தது. பசுவுக்கு சிறப்பு பூஜைகளை தம்பதியினர் செய்தனர்.
இதில் நாங்குநேரி மதுரகவி ராமானுஜ ஜீயர், ஆழ்வார்திருநகரி எம்பெருமானார் ஜீயர் ஆகியோர் கலந்துகொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்கள். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story