விற்பனைக்கு தயார் நிலையில் உள்ள கரும்புகள்


விற்பனைக்கு தயார் நிலையில் உள்ள கரும்புகள்
x
தினத்தந்தி 11 Dec 2021 2:18 AM IST (Updated: 11 Dec 2021 2:18 AM IST)
t-max-icont-min-icon

திருக்காட்டுப்பள்ளி பகுதியில் விற்பனைக்கு தயார் நிலையில் கரும்புகள் உள்ளன.

திருக்காட்டுப்பள்ளி;
திருக்காட்டுப்பள்ளி பகுதியில் விற்பனைக்கு தயார் நிலையில்  கரும்புகள் உள்ளன.
கரும்புகள்
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில்  பொங்கல் கரும்பு விளைந்து வெட்டுவதற்கு தயார் நிலையில் உள்ளது. திருக்காட்டுப்பள்ளி பகுதியில் விளைவிக்கப்படும் பொங்கல் கரும்புக்கு தமிழ்நாடு முழுவதும் வாடிக்கையாளர்கள் உள்ளனர். நல்ல மண்வளம், காவிரி தண்ணீர், பாரம்பரியமான வேளாண் உத்திகளை  கொண்டு இந்த பகுதியில் கரும்பு விளைவிப்பதால் திருக்காட்டுப்பள்ளி பகுதி கரும்புக்கு நல்ல மவுசு உண்டு. இந்த ஆண்டும் வழக்கம் போல திருக்காட்டுப்பள்ளி பகுதிகளில் கொட்டித்தீர்த்த மழையையும் தாங்கி நல்ல முறையில் கரும்புகள் வளர்ந்து காணப்படுகிறது. 
24 நாட்கள்
வளர்ந்த கரும்புகளை தோகை உறித்து விவசாயிகள் தயார் நிலையில் விவசாயிகள் வைத்துள்ளனர். வெளி மாவட்ட வியாபாரிகள் திருக்காட்டுப்பள்ளி பகுதிக்கு வந்து கரும்புகளை பார்வையிடவில்லை. என விவசாயிகள் கூறினர். தமிழக அரசு பொங்கல் பரிசு பையில் முழுக் கரும்பு கொடுப்பதாக அறிவித்துள்ளது. இதனால் இந்த பகுதியில் விளைவித்து உள்ள கரும்பு நல்ல விலைக்கு விற்பனையாகி விவசாயிகளுக்கு லாபத்தை கொடுக்கும் என்ற நம்பிக்கை விவசாயிகள் மத்தியில் உருவாகியுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 24 நாட்கள் உள்ளன. 
கட்டுப்படியான விலை
இந்தநிலையில் வெளிமாவட்ட வியாபாரிகள் இனி தான் வரத்தொடங்குவார்கள் என்று விவசாயி ஒருவர் கூறினார். 
 தமிழக அரசும் இந்த பகுதியில் உள்ள கரும்பு விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலையில் கரும்புகளை கொள்முதல் செய்து பொங்கல் பரிசாக வழங்க வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருக்காட்டுப்பள்ளியில் நேற்றைய நிலவரப்படி ஒரு கரும்பு  சில்லறை விற்பனையில் ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதிக அளவில் கரும்புகளை வெட்டி சில்லரை விற்பனைக்கு வரும்போது இந்த விலை குறைய வாய்ப்பு உள்ளது என விவசாயிகள் கூறினர்.

Next Story